பணியாரக்கல் என்பது ஒரு பாரம்பரிய சமையலறை பாத்திரமாகும், இது கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் சிற்பிகளால் தயாரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வடிவமைப்பு, வடிவம், மாடல் மற்றும் கோணங்களில் கல் பாத்திரங்களை தயாரிப்பதில் எங்களின் கைவினை கலைஞர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். இதன் காரணமாக தான் எங்கள் தளத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்து கல் பாத்திரங்களும் பாரம்பரிய தோற்றம் மற்றும் பண்டைய பாணியை கொண்டிருக்கின்றன. எந்த இயந்திர உதவியும் இல்லாமல் இவை கையால் வெட்டப்படுவதால் இதன் பரிமானமானது தோரயமாகவே இருக்கும். நாங்கள் 7 குழி பணியாரக்கல், 10 குழி பணியாரக்கல், 12 குழிபணியாரக்கல், 14 குழிபணியாரக்கல் போன்ற நான்கு வெவ்வேறு அளவிலான பணியாரக்கற்களை விற்பனை செய்கிறோம். குறிப்பாக 7 குழி பணியாரக்கலானது, 7 குழி பணியாரக்கல் (சிறிய அளவு), 7 குழி பணியாரக்கல் (நடுத்தர அளவு), 7 குழி பணியாரக்கல் (பெரிய அளவு) என்ற 3 வெவ்வேறு அளவுகள் மற்றும் மாதிரிகள் உள்ளன.
பயன்பாட்டு முறை:
எண்ணெய் மற்றும் மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் ஒன்றை உருவாக்கி அதனை கல்லின் மீது தடவி 24 மணி நேரம் வரை உலர விடவும். இரண்டாவது நாள், ஸ்டார்ச் நீரின் கலவையை சூடாக்கி, பாத்திரத்தில் ஊற்றி 24 மணி நேரம் வைக்கவும். அடுத்த நான்கு நாட்களுக்கு இந்த செயல்முறையை மீண்டும் செய்யவும். 7 வது நாளில் இது பயன்படுத்த தயாராக இருக்கும். பராமரிப்பு முறை: வழக்கமான எரிவாயு பர்னரில் இந்த பாத்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம். சமையலின் இறுதி வரை நெருப்பை குறைந்த மட்டத்தில் வைக்கவும். மென்மையான ஸ்க்ரப்பர் மற்றும் சோப்பைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அதை தொடர்ந்து சுத்தம் செய்யலாம்.









Reviews
There are no reviews yet.