பெண் தேனீக்களின் வயிற்றுப் பகுதியில் இயற்கையாக இருக்கும் சுரப்பிகளில் இருந்து தேன் மெழுகு உற்பத்தியாகின்றன. இனப்பெருக்கத்துக்காகவும், உற்பத்திக்காகவும் தானே தயாரித்துக் கொண்ட தேன் கூட்டில் தேனீக்கள் அவற்றை சேகரித்துக்கொள்கிறது. சேகரிக்கப்பட்ட அந்த தேன் மெழுகை எடுத்து பல்வேறு நோக்கங்களுக்காக தேனீ உற்பத்தியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தேனீக்கள் 150000 கிலோ மீட்டர் பறந்தால்தான் ஒரு பவுண்டு தேன் மெழுகைச் சேகரிக்க முடியும். தேன்கூட்டில் இருந்து நேரடியாகப் பெறப்படுபவை மஞ்சள் தேன் மெழு என்றழைக்கப்படுகிறது. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும் தேன் மெழுகு வெள்ளைத் தேன்மெழுகு எனப்படுகிறது. சிகிச்சைக்கு உதவும் ஆல்கஹால் தயாரிக்க இந்த மஞ்சள் தேன் மெழுகு பயன்படுகிறது. ஆர்கானிக் தேன் மெழுகு உங்கள் சருமத்திற்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
இது உங்கள் முகம் மற்றும் உடலுக்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இது சருமத்தை ஆழமாக வளர்த்து, புத்துயிர் அளிக்கிறது. இது உங்கள் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், நீண்ட காலத்திற்கு நீரேற்றமாகவும் வைத்திருக்கும். தோலில் ஈரப்பதத்தை ஏற்படுத்துவதோடு மட்டும் நின்று விடாமல், அழகான உதடுகளுக்கு நல்ல தைலமாகவும், வலி நிவாரணியாகவும் தேன்மெழுகு இருக்கிறது. .









Reviews
There are no reviews yet.